Home நாடு எம்40 பிரிவினருக்கு ஐ-சினார், ஐ-லெஸ்டாரி திட்டத்தை வழங்க வேண்டும்

எம்40 பிரிவினருக்கு ஐ-சினார், ஐ-லெஸ்டாரி திட்டத்தை வழங்க வேண்டும்

608
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பி40 பிரிவில் உள்ளவர்களை மட்டுமே கவனம் செலுத்தும் பெமெர்காசா உதவியைத் தவிர்த்து, ஒட்டுமொத்தமாக மக்களுக்கு உதவ ஐ-சினார் மற்றும் ஐ-லெஸ்டாரி 2.0 திட்டங்களை விரிவுபடுத்த அம்னோ தலைவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டைத் தாக்கிய கொவிட் -19 பாதிப்பு எம்40 பிரிவில் உள்ளவர்கள் உட்பட பலரை பாதித்ததாக அம்னோ உச்சமன்ற குழு உறுப்பினர் ரஸ்லான் ரபி தெரிவித்தார்.

எனவே, ஊழியர் சேமநிதி கணக்கிலிருந்து சேமிப்பைத் திரும்பப் பெறுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஐ-சினார் மற்றும் ஐ-லெஸ்டாரி திட்டங்களை அரசாங்கம் நீட்டிக்க வேண்டும் என்றார்.

#TamilSchoolmychoice

“ஐ-சினார் மற்றும் ஐ-லெஸ்டாரி 2.0 திட்டங்கள் ஏற்படுத்துவது பொருத்தமானது, ஏனெனில் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி பி40 பிரிவை இலக்காகக் கொண்டுள்ளது.

“இன்று கொவிட் -19 நிலைமை எம்40 பிரிவினரையும் மோசமாக பாதித்துள்ளது. பல சிறு வணிகர்களும் திவாலாகிவிட்டனர்.

“மக்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிடுவதற்கு அரசாங்கம் தற்போதுள்ள தரவை நம்ப முடியாது,” என்று ரஸ்லான் மலேசியாகினியிடம் கூறினார்.