Home நாடு நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாமன்னரிடம் கோரப்பட்டது

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாமன்னரிடம் கோரப்பட்டது

690
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று இறுதியாக மாமன்னரைச் சந்தித்த அமானா தலைவர் முகமட் சாபு, அவசரநிலை இன்னும் நடந்து கொண்டிருக்கும்போது நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து மாமன்னரிடம் எழுப்பியதாகக் கூறினார்.

சந்திப்பின் போது, தற்போதைய அரசாங்கத்தின் நியாயத்தன்மை குறித்து எந்த விவாதமும் எழுப்பப்படவில்லை என்றும் முகமட் சாபு கூறினார்.

“கலந்துரையாடலின் கவனம் கொவிட் -19 சம்பவங்களில் இருந்தது, மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றிணைக்க நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்கும்படி கேட்டுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.