Home வணிகம்/தொழில் நுட்பம் ஆப்பிள் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் மாநாடு : பல புத்தாக்கங்கள் அறிமுகம்

ஆப்பிள் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் மாநாடு : பல புத்தாக்கங்கள் அறிமுகம்

836
0
SHARE
Ad

கூப்பர்ட்டினோ : ஆண்டுதோறும் நடைபெறும் ஆப்பிள் நிறுவனத்தின் பன்னாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கான மாநாடு என்பது உலக அளவில் அனைத்துத் தொழில் நுட்ப நிறுவனங்களும் கூர்ந்து நோக்கும், பின்பற்றும் ஒரு நிகழ்ச்சியாகும்.

உலகம் எங்கிலும் இருந்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்பிள் மேம்பாட்டாளர்கள், ஆப்பிள் தலைமையகம் அமைந்திருக்கும் கூப்பர்ட்டினோ நகரில் இந்த மாநாட்டுக்காக ஆண்டுதோறும் குவிவது வழக்கம்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாநாடு கொவிட்-19 காரணமாக இயங்கலை வழி நடத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டுக்கான மாநாடு கடந்த திங்கட்கிழமை தொடங்கி இயங்கலை வழி நடைபெற்று முடிந்திருக்கிறது.

இந்த மாநாட்டில் பல புதிய புத்தாக்க அம்சங்கள், ஆப்பிள் கருவிகளில் பல புதிய தொழில் நுட்ப நுணுக்கங்கள், மென்பொருள்களில் மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பேஸ் டைம் செயலியிலும், ஆப்பிள் வாட்ச் கருவியிலும் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் தனது ஆப்பிள் கருவிகளுக்கான உள்ளடக்க மென்பொருளை மேம்படுத்துவது ஆப்பிளின் வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஐஓஎஸ் 15 மென்பொருள் எதிர்வரும் ஜூலை தொடங்கி பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மற்ற புதிய அம்சங்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம்!