கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 12 ) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 5,793-ஆக பதிவாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 652,204- ஆக உயர்ந்துள்ளது.
மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 1,582 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது.
இரண்டாவது நிலையில் நெகிரி செம்பிலானில் 618 தொற்றுகள் பதிவாயின. அதனை அடுத்து கோலாலம்பூரில் 559 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சரவாக்கில் 569 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
இதற்கிடையில் நாடு முழுவதிலும் கொவிட் தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று ஜூன் 11 நள்ளிரவு வரையில் இரண்டு அளவைகளையும் (டோஸ்) கொண்ட தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4,227,554 ஆக உயர்ந்துள்ளன.
நேற்று நள்ளிரவு வரையிலான ஒரு நாளில் மட்டும் 124,618 பேர்களுக்கு இரண்டு அளவைகள் கொண்ட கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.