Home உலகம் ஈரோ 2020 : பின்லாந்து 1 – டென்மார்க் 0

ஈரோ 2020 : பின்லாந்து 1 – டென்மார்க் 0

661
0
SHARE
Ad
டென்மார்க் – பின்லாந்து இடையிலான ஆட்டத்தின்போது…

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : (குறிப்பிடப்படும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்) ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் நேற்று சனிக்கிழமை (ஜூன் 12) நள்ளிரவு 12.00 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது ஆட்டத்தில் டென்மார்க்கும் பின்லாந்தும் களமிறங்கின.

ஆட்டம் இடைவேளை நேரத்தை நெருங்கும் நேரத்தில் விளையாட்டாளர் ஒருவர் காயமடைந்ததால் இந்தப் போட்டி நிறுத்தப்பட்டது.

டென்மார்க்கின் கிறிஸ்டியன் எரிக்சன் (Christian Eriksen) திடீரென மயங்கி விழுந்ததால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டம் பின்னர் சற்று நேர இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியது.

இடைவேளைக்கு முந்திய நான்கு நிமிட ஆட்டத்தோடு இடைவேளைக்குப் பிந்திய ஆட்டமும் தொடர்ந்து நடைபெற்றது.

ஆட்டத்தின் இறுதியில் பின்லாந்து 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள்:

இத்தாலி 3 – துருக்கி 0

சுவிட்சர்லாந்து 1 – வேல்ஸ் 1

பின்லாந்து 1 – டென்மார்க் 0

பெல்ஜியன் 3 – ரஷியா 0