Home உலகம் ஈரோ 2020 : பெல்ஜியம் 3-0 கோல்களில் ரஷியாவைத் தோற்கடித்தது

ஈரோ 2020 : பெல்ஜியம் 3-0 கோல்களில் ரஷியாவைத் தோற்கடித்தது

677
0
SHARE
Ad

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் (ரஷியா) : (குறிப்பிடப்படும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்) ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (ஜூன் 13) 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ரஷியாவும், பெல்ஜியமும் மோதின.

ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் ரஷியாவைத் தோற்கடித்தது.

ரோமேலு லுக்காக்கு என்ற பெல்ஜியம் விளையாட்டாளர் ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து பெல்ஜியத்தை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

இரண்டாவது கோலை தோமஸ் மியூனியர் 34-வது நிமிடத்தில் அடித்தார். ரோமேலு லுக்காக்கு தனது மூன்றாவது கோலை அடித்து பெல்ஜியத்தின் இறுதி வெற்றியை உறுதி செய்தார்.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள்:

இத்தாலி 3 – துருக்கி 0

சுவிட்சர்லாந்து 1 – வேல்ஸ் 1

பின்லாந்து 1 – டென்மார்க் 0

பெல்ஜியம் 3 – ரஷியா 0