Home இந்தியா சிவ சங்கர் பாபா மீது பாலியல் தொல்லைக்காக வழக்கு பதிவு

சிவ சங்கர் பாபா மீது பாலியல் தொல்லைக்காக வழக்கு பதிவு

902
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாட்டில் அடுத்தடுத்து பள்ளிகளில் நிலவி வரும் பாலியல் தொல்லைகள் மீதான புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கும் மாணவியர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர்கள் சிலர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆன்மீகத் தலைவர் எனக் கூறிக்கொண்டு கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி அனைத்துலகத் தங்கும் விடுதி பள்ளி ஒன்றை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா (படம்). இவர் மீது பல சர்ச்சைகள் அவ்வப்போது எழுவது உண்டு. இருப்பினும் இவருக்கென பல பக்தர்கள் இவரை குருவாகப் போற்றி வணங்கி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இவர் மீதும் பாலியல் தொல்லை புகார்கள் எழுந்துள்ளன. பள்ளி மாணவ, மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து காவல் துறையினர் இவர்மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது வடநாட்டில் பயணம் மேற்கொண்டிருக்கும் சிவசங்கர் பாபா டேராடூனில் நெஞ்சு வலி எனக் கூறிக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேளம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் இவர் மீதான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 13 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் இருவர் பதினெட்டு வயதுக்கும் குறைந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக மத்திய புலனாய்வுத் துறையான சிபிசிஐடிக்கு சிவசங்கர் பாபா தொடர்பான வழக்குகள் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.