Home நாடு மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிவுற்றது

மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிவுற்றது

708
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னருக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான சிறப்பு சந்திப்புக் கூட்டம் முடிவுற்றது.

முன்னதாக, ஜோகூர் சுல்தான், மாலை 5.15 மணியளவில் இஸ்தானா நெகாராவிலிருந்து முதல் நபராக வெளியேறினார்.

முன்னதாக, இந்த சிறப்பு சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியதாக நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

இராணுவத் தளபதி டான்ஸ்ரீ அபெண்டி புவாங், காவல்துறை தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மற்றும் சட்டத்துறைத் தலைவர் வழக்கறிஞர் இத்ருஸ் ஹருண் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான அறிக்கை இஸ்தானா நெகாரா வெளியிடும் என்று நம்பப்படுகிறது.