Home உலகம் இரண்டாவது முறையாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல்

இரண்டாவது முறையாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல்

658
0
SHARE
Ad

ஜெருசேலம்: காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் இது இரண்டாவது சுற்று தாக்குதலாகும்.

இந்த தாக்குதல் ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலுக்கு பதிலளித்ததாக சியோனிஸ்டுகள் கூறுகின்றனர். இருப்பினும், இதுவரை எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

கிழக்கு ஜெருசேலமில் போராட்டங்களில் ஈடுபட்ட பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களை கலைக்க இஸ்ரேலிய காவல்துறையினர் முன்னர் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தினர்.

#TamilSchoolmychoice

ஜூன் 16 அன்று, போர்நிறுத்தத்திற்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் தனது முதல் விமானத் தாக்குதலை நடத்தியது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வெளியேற்றிய பின்னர் புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து இந்த நடவடிக்கைகள் எழுந்துள்ளன.