தேசிய மீட்பு திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, நான்காம் கட்டம் வரை செயல்பட அனுமதிக்காத பொருளாதாரத் துறைகளையும் அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொண்டதாக நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
“நிதி அமைச்சக கலந்துரையாடல்கள் மூலம், எதிர்காலத்தில் கூடுதல் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். விவரங்கள் இறுதி செய்யப்பட்டவுடன், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வணிகங்களுக்கு உதவ அமைச்சு மேம்பாடுகளை வகுக்க முடியும்,” என்று அவர் நேற்று இரவு தெரிவித்தார்.
Comments