Home இந்தியா கோவாவாக்ஸ்: குழந்தைகளுக்கு செலுத்தி இந்தியா சோதனை

கோவாவாக்ஸ்: குழந்தைகளுக்கு செலுத்தி இந்தியா சோதனை

611
0
SHARE
Ad

புது டில்லி: அடுத்த மாதம் நோவோவாக்ஸ் கொவிட்-19 தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி மருத்துவ சோதனை செய்ய உள்ளதாக சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா கூறியுள்ளது.

இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவாவாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. நோவாவாக்ஸுடன் இணைந்து சீரம் நிறுவனம், செப்டம்பர் மாதத்திற்குள் கோவோவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடந்த கோவாவாக்ஸ் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை முடிவில் இது கொவிட்-19 தொற்றைத் தடுப்பதில் 90.4 விழுக்காடு திறன் வாய்ந்தது என தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

குழந்தைகள் மீது சோதனை நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கினால், நாட்டின் மக்கள் தொகையில் குழந்தைகள் மீது பரிசோதனை நடத்தும் மூன்றாவது தடுப்பூசி கோவாவாக்ஸ் ஆகும்.