Home இந்தியா மலேசிய நடிகை புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

மலேசிய நடிகை புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

754
0
SHARE
Ad

சென்னை : அதிமுகவின் முன்னாள் தமிழக அமைச்சரான மணிகண்டன் தமிழ் நாடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடோடிகள் என்ற படத்திலும் மற்ற சில படங்களிலும் நடித்தவர் மலேசிய நடிகையான சாந்தினி. அதன்பிறகு சில வருடங்களுக்கு அவர் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

ஆனால் திடீரென சில வாரங்களுக்கு முன்னர் ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வந்த சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுடன் தான் குடும்பம் நடத்தியதாகவும் அதன் மூலம் மணிகண்டனின் வற்புறுத்தலால் 3 முறை  கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் காவல் துறையில் புகார் செய்தார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்
#TamilSchoolmychoice

தன்னுடன் இணைந்து தாம்பத்திய உறவு கொண்டு குடும்பம் நடத்திய பின்னர் தற்போது தன்னை ஒதுக்குவதாகவும், திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் மணிகண்டன் மீது சாந்தினி புகார்களைத் தெரிவித்தார்.

சாந்தினியின் புகார்களைத் தொடர்ந்து மணிகண்டன் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற மனு செய்தார். ஆனால் நீதிபதிகள் முன் ஜாமீன் தர மறுத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து காவல் துறை நடவடிக்கையில் இறங்க, மணிகண்டனோ தலைமறைவானார். கடந்த சில நாட்களாக அவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், இன்று மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரை இரகசியமான ஓரிடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.