Home No FB காணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தலா? உண்மை கூறுவது யார்?

காணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தலா? உண்மை கூறுவது யார்?

1107
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | “வேலாயுதம் – ரவீந்திரன் உண்மை சொல்வது யார்?” | 20 ஜூன் 2021
Selliyal Video | Velayutham vs Ravindran; Who is telling the truth? | 20 June 2021

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை தமிழ் நாட்டு மண்ணிலும், மலேசியாவிலும் தெறிக்க விட்டிருக்கிறது, வேலாயுதம் என்ற தமிழ் நாட்டு அன்பர் வழங்கியிருக்கும் ஒரு நேர்காணல்.

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் லட்சுமி இராமகிருஷ்ணன் நேர்கொண்ட பார்வை என்ற நேர்காணல் நிகழ்ச்சி மூலம், வேலாயுதம் மூலமாக வெளியே கொண்டுவந்திருக்கும் விவகாரங்கள் பொதுமக்களின் விவாதப் பொருளாகியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மலேசியப் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டிருக்கும் மேலும் சில தகவல்கள் இந்த விவகாரத்தில் சில திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

வேலாயுதம் சொல்வது பொய் என்கிறார், புகார் சுமத்தப்பட்டிருக்கும் ரவீந்திரன் என்ற உணவக நிர்வாகி.

இந்த விவகாரத்தில் ஆகக் கடைசியாக எழுந்திருக்கும் சர்ச்சைகளை விவரிக்கின்றது, மேற்கண்ட செல்லியல் காணொலி.