Home நாடு ‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’

‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’

945
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்கும் மாமன்னர் பரிந்துரைக்கு ஏற்ப, அம்னோவைப் போல மஇகா, தேசிய கூட்டணி அரசுக்கு எந்த காலக்கெடுவும் கொடுக்க விரும்பவில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி நியாயமான சூழ்நிலைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட அரசாங்கத்திற்கு விட்டுவிடுவதாக அவர் கூறினார்.

“ஒரு நியாயமான சூழ்நிலையின் அடிப்படையில் அரசாங்கம் விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும், எனவே எதிர்காலத்தில் முடிவு செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்,” என்று அவர் எப்எம்டியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி 14 நாட்களுக்குள் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டும் முடிவு சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று மசீச தலைமைச் செயலாளர் சோங் சின் வூன் கூறியுள்ளார்.

அம்னோவின் நகர்வை கட்சியின் சொந்த முடிவாக விக்னேஸ்வரன் காண்கிறார்.

“அது அம்னோவின் முடிவு, தேசிய முன்னணி முடிவல்ல, ” என்று அவர் கூறினார்.