Home நாடு கொவிட்-19: புதிதாக 4,743 தொற்றுகள் பதிவு – வழக்கம்போல் சிலாங்கூர் முதலிடம்!

கொவிட்-19: புதிதாக 4,743 தொற்றுகள் பதிவு – வழக்கம்போல் சிலாங்கூர் முதலிடம்!

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 4,743 புதிய  கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்றைய எண்ணிக்கை 4,611 ஆக இருந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏறத்தாழ 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தொற்றுகளின் எண்ணிக்கை நாள்தோறும் இருந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 705,762 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

வழக்கம்போல் தொற்றுகளின் எண்ணிக்கையில் மாநிலங்கள் அளவில் சிலாங்கூர் முதல் மாநிலமாக இருக்கிறது.

இங்கு 1,566 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. அடுத்த நிலையில் கோலாலம்பூர் 635 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது.

585 தொற்றுகளுடன் நெகிரி செம்பிலான் 3-வது இடத்தில் இருந்து வருகிறது.

(மேலும் விவரங்கள் தொடரும்)