Home உலகம் ஈரோ 2020 : ஜெர்மனி 2- ஹங்கேரி 2; ஜெர்மனியை மிரட்டிய ஹங்கேரி

ஈரோ 2020 : ஜெர்மனி 2- ஹங்கேரி 2; ஜெர்மனியை மிரட்டிய ஹங்கேரி

1690
0
SHARE
Ad
ஜெர்மனி பயிற்சியாளர் ஜோகிம் (வலது) ஜெர்மனி விளையாட்டாளருடன்…

மூனிக் (ஜெர்மனி) –  ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் வியாழக்கிழமை (ஜூன் 24) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “எஃப்” பிரிவில் ஜெர்மனி-ஹங்கேரி இரண்டும் களம் கண்டன.

ஜெர்மனியின் மூனிக் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே தலா 2 கோல்கள் போட்டு சமநிலை கண்டன. முதலில் ஜெர்மனியை விட ஹங்கேரி 2-1 கோல் எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தபோது, இதே நிலை நீடித்தால் தோல்வி கண்டு ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்தே ஜெர்மனி வெளியேறலாம் என்ற நிலைமை இருந்தது.

#TamilSchoolmychoice

இருப்பினும் ஜெர்மனியின் காரெட்ஸ்கா என்ற விளையாட்டாளர் ஒரு கோல் போட்டு ஜெர்மனியை சமநிலைக்குக் கொண்டு வந்து தனது நாட்டைக் காப்பாற்றினார்.

இதைத் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாக ஜெர்மனி தேர்வாகியது.

ஹங்கேரி ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.

எஃப் பிரிவில் பலம் வாய்ந்த 3 குழுக்கள் இடம் பெற்றிருந்தன. ஜெர்மனி, போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகியவையே அந்த 3 நாடுகள். இந்த மூன்று நாடுகளுமே ஐரோப்பியக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் வாய்ப்புள்ள நாடுகளாகக் கருதப்பட்ட வேளையில், எந்த நாடு குழு ஆட்டங்களில் இருந்தே வெளியேறும் என்ற எதிர்பார்ப்பு காற்பந்து இரசிகர்களிடையே ஏற்பட்டிருந்தது.

அதிர்ஷ்டவசமாக 3 குழுக்களுமே அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களுக்குள் தேர்வாகியிருக்கின்றன.

புதன்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை ஜூன் 24 அதிகாலை) மற்ற ஆட்டங்களின்  முடிவுகள்: