Home நாடு செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : சிலாங்கூர் தடுப்பூசி திட்டத்திற்கு அபரிதமான ஆதரவு

செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : சிலாங்கூர் தடுப்பூசி திட்டத்திற்கு அபரிதமான ஆதரவு

1139
0
SHARE
Ad

சிலாங்கூர் தடுப்பூசிக்கு 50 ஆயிரம் நிறுவனங்கள் ஆதரவு

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடங்கியுள்ள கொவிட் தடுப்பூசி போடும் திட்டத்திற்கு அபரிதமான ஆதரவு கிடைத்திருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கு இதுவரையில் 50,000 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என்றும், அந்த நிறுவனங்களின் 2 மில்லியன் ஊழியர்களுக்காக தடுப்பூசித் திட்டத்தில் இணைந்துகொள்ள அந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டின என்றும் சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரிர் தெரிவித்துள்ளார்

2 விதமான தடுப்பூசிகள் ஒரே நபருக்கு – தற்போதைக்கு இல்லை

இரு வேறு விதமான தடுப்பூசிகளை ஒரே நபருக்கு மாற்றி மாற்றி செலுத்தும் நடைமுறையை தற்போதைக்கு அறிமுகப்படுத்தப் போவதில்லை என கொவிட் தடுப்பூசித் திட்டத்திற்கான அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தின் 400 ஊழியர்களுக்கும் தடுப்பூசி

விரைவில் நாடாளுமன்றம் கூட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு ஏற்ப நாடாளுமன்றக் கட்டடத்தில் பணியாற்றும் 400 ஊழியர்களுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை நேற்று முதல் தொடங்கப்பட்டது – அவர்களில் உணவு பரிமாறுபவர்கள், தூய்மைப்படுத்தும் தொழிலாளர்களும் அடங்குவர்.

ஜூலை மாத மத்திக்குள் 10 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி

#TamilSchoolmychoice

நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசிகள் போடப்படும் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வருவதால் எதிர்வரும் ஜூலை மாதம் மத்திக்குள் நாட்டின் 10 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி போட்டு விட முடியும் என அமைச்சர் கைரி ஜமாலுடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நஜிப் மீதான 1 எம்டிபி வழக்கு – ஜூலை 5 தொடரும்

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீதான 2.28 பில்லியன் டாலர் 1எம்டிபி வழக்கு எதிர்வரும் ஜூலை 5-ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது – தற்போது அமுலில் இருக்கும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக இந்த வழக்கு ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.