Home நாடு அஸ்மின் அலிக்கு எதிரான கோம்பாக் வாக்காளர்கள் வழக்கு – தடையின்றி தொடரும்

அஸ்மின் அலிக்கு எதிரான கோம்பாக் வாக்காளர்கள் வழக்கு – தடையின்றி தொடரும்

530
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கட்சி மாறியதைத் தொடர்ந்து அஸ்மின் அலி மீது வழக்கு தொடர்ந்திருக்கும் கோம்பாக் நாடாளுமன்ற வாக்காளர்களின் வழக்கு தடையின்றி தொடர்ந்து நடத்தப்படும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (ஜூன் 30) தீர்ப்பளித்தது.

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும், அனைத்துலக வாணிப அமைச்சருமான அஸ்மின் அலி மீது அந்த தொகுதியின் 10 வாக்காளர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.

அந்த வாக்காளர்கள், 2018 பொதுத் தேர்தலில் தாங்கள் பிகேஆர் கட்சிக்கு வாக்களித்ததாகவும் ஆனால் அஸ்மின் “ஷெராட்டன் நகர்வு” காரணமாக, கட்சி மாறியதால் அவர் தங்களிடம் கொண்டிருந்த கடப்பாட்டையும், தேர்தல் வாக்குறுதிகளையும் மீறிவிட்டதாகக் கூறி 9 கோரிக்கைகளுடன் அவர் மீது வழக்கு தொடுத்தனர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென அஸ்மின் அலி நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். ஆனால் அந்த மனுவை நேற்று நடைபெற்ற விசாரணையின்போது நிராகரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்படும் என தீர்ப்பளித்தது.

மேலும் அந்த வழக்கில் அஸ்மின் அலி சமர்ப்பித்திருந்த சத்தியப்பிரமாண ஆவணங்களில் அன்வார் இப்ராகிம் மீதான ஓரினப் புணர்ச்சி குறித்த சில தவறான தகவல்கள் நீக்கப்பட வேண்டுமென அந்தப் பத்து வாக்காளர்கள் மனு ஒன்றைச் செய்திருந்தனர்.

எனினும் தற்போதைக்கு அந்தத் தகவல்களை நீக்க முடியாது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

கோம்பாக் நாடாளுமன்ற வாக்காளர்களைப் பிரநிநிதித்து வழக்கறிஞர் யோகேந்திரா நடராஜா வழக்கை நடத்துகிறார்.

நேற்றைய தீர்ப்பைத் தொடர்ந்து வழக்கிற்கான தேதிகளையும் நீதிமன்றம் அறிவித்தது.  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கின் நிர்வாகம் மீதான விசாரணை நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் வழக்கு விசாரணைகள் தொடங்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.