Home நாடு ஷாபி அப்துல்லா: 9.5 மில்லியன் வழக்கு ஜூலை 22-இல் தொடர்கிறது

ஷாபி அப்துல்லா: 9.5 மில்லியன் வழக்கு ஜூலை 22-இல் தொடர்கிறது

736
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரபல வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா மீதான 9.5 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்ற வழக்கு எதிர்வரும் ஜூலை 22 முதல் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு நேற்று வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டதன் காரணமாக இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஷாபி மீதான வழக்கின் விவரங்கள் என்ன?

தன்மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு தன்னை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கை என வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்பான பல வழக்குகளில் அவரைப் பிரதிநிதிக்கும் பிரபல வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா 9.41 மில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கியைச் செலுத்த வேண்டும் என மலேசிய அரசாங்கம் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது.

உள்நாட்டு வருமானவரி இலாகா மலேசிய அரசாங்கத்தின் சார்பில் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக அவர் செலுத்தாத வருமான வரி பாக்கிக்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மே 6-ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஷாபி அப்துல்லா மொத்தம் செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கித்தொகை 9,414,708.32 என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.