Home நாடு டத்தோ டி.சுப்பையா – மஇகா பினாங்கு மாநில முன்னாள் தலைவர் காலமானார்!

டத்தோ டி.சுப்பையா – மஇகா பினாங்கு மாநில முன்னாள் தலைவர் காலமானார்!

152
0
SHARE
Ad
அமரர் டத்தோ டி.சுப்பையா

ஜோர்ஜ் டவுன் :  துன் சம்பந்தன், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், துன் சாமிவேலு என மூன்று மஇகா தலைவர்களின் கீழ் பினாங்கு மாநிலத் தலைவராக சேவையாற்றிய வழக்கறிஞர் டத்தோ டி.சுப்பையா கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 14-ஆம் தேதி காலமானார். அவருக்கு வந்து 92.

மறைந்த சுப்பையாவின் இறுதிச் சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) நடந்தேறி, பத்து லஞ்சாங் மயானத்தில் அன்னாரின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினராகவும், பிறை சட்டமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றிய சுப்பையா பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

#TamilSchoolmychoice

ஒரு வழக்கறிஞரான அவர் பல தவணைகளுக்கு மஇகா பினாங்கு மாநிலத் தலைவராகப் பதவி வகித்தார்.

1974 முதல் 1986 வரை 3 தவணைகளுக்கு அவர் பாகான் டாலான் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். 1986-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் ஜசெகவின் சண்முகம் நடேசன் என்பவரிடம் தோல்வி கண்டார்.

துன் டாக்டர் லிம் சோங் இயூ முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் நிலக் குழு தலைவராகவும் சுப்பையா பொறுப்பு வகித்திருக்கிறார்.

1971 முதல் 1990 வரை அவர் மஇகா பினாங்கு மாநிலத் தலைவராகப் பதவி வகித்திருக்கிறார்.