Home நாடு சரவணன் தந்தையர் தின வாழ்த்து : “சிரமங்கள் அணுகாமல் பார்த்துக் கொள்ளும் தந்தையரைப் போற்றுவோம்”

சரவணன் தந்தையர் தின வாழ்த்து : “சிரமங்கள் அணுகாமல் பார்த்துக் கொள்ளும் தந்தையரைப் போற்றுவோம்”

126
0
SHARE
Ad

மஇகா தேசியத் துணைத் தலைவரும்,
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின்
தந்தையர் தின வாழ்த்துச் செய்தி

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்.

தனது கடமையில் சற்றும் விலகாமல் இருக்கும் தந்தையர்களை இந்த தந்தையர் தினத்தில் கொண்டாடி மகிழ்வோம்.

#TamilSchoolmychoice

தான் கடந்து வந்த சிரமங்களையும், சிக்கல்களையும் மறைத்துத் தன் பிள்ளைகள் அந்த கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது என எண்ணும் தந்தையர்கள் அனைவருக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துகள்.

‘மாதா பிதா குரு தெய்வம்’ ‘தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’

இப்படித் தாயைப் புகழும் அதே கணத்தில், தந்தைக்கும் அந்த புகழில் பங்கு உண்டு என்பதை நாம் மறுக்கவோ, மறக்கவோ இயலாது. ஒரு குடும்பத்தில் தந்தை சரியாக தனது கடமையைச் செய்தால்தான், தாயால் சரியான முறையில் தன் குழந்தைகளை வளர்க்க முடியும், குடும்பத்தைக் காக்க முடியும்.

கடந்த காலங்களைப் போல குடும்பத்தின் பொறுப்பு, குடும்பத்திற்குப் பொருளாதாரம் ஈட்டும் பொறுப்பு தந்தைக்கு மட்டுமே என்று இல்லாமல் இருந்தாலும், பொருளாதாரத்தின் பெரும் பங்கு தந்தையின் தோள்களிலேயே சுமக்கப்படுகிறது.

அயராமல் உழைப்பதும், குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், பிள்ளைகளைச் சிறிது கண்டிப்போடு வளர்ப்பதும் ஒரு தந்தையின் கடமை. காலம் மாறிவிட்டது குழந்தைகளிடம் நட்பு முறையில் பழக வேண்டும் என்று நாம் சொன்னாலும், தந்தைக்கே உரிய அந்த கண்டிப்பு இருக்கத்தான் வேண்டும்.

இப்படித் தன் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைக்கும் தந்தையின் அர்ப்பணிப்பைப் போற்றுவதற்கு இந்த ஒரு நாள் மட்டும் போதுமா?

ஒவ்வொரு நாளும் மதித்துப் போற்றத் தக்கவர் தந்தை என்றாலும் இந்த ஒரு நாள் முழுதும் அவருக்காக ஒதுக்கி அன்பு பாராட்டுவோம்.

வயதான காலத்தில் தந்தையரை, தந்தையரை முதியோர் இல்லத்தில் விடாமல் இருப்போம்.

தந்தையர் தின நல்வாழ்த்துகள்.