Home நாடு பெஜூவாங் கட்சிக்கான பதிவு அங்கீகரிக்கப்பட்டது – மகாதீர் தகவல்

பெஜூவாங் கட்சிக்கான பதிவு அங்கீகரிக்கப்பட்டது – மகாதீர் தகவல்

749
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நீண்டகாலமாக இழுபறியாக இருந்து வந்த பெஜூவாங் கட்சியின் பதிவை சங்கப் பதிவிலாகா அங்கீகரித்துள்ளது. இந்தத் தகவலை அந்தக் கட்சியின் தலைவரான துன் மகாதீர் வெளியிட்டார்.

அம்னோ, தேசியக் கூட்டணியில் இருந்து விலகியிருக்கும் இந்தத் தருணத்தில் பெஜூவாங் கட்சியின் பதிவு முக்கிய அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பெஜூவாங் மலேசிய அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

உறுப்பினர் சேர்க்கையும் இனி தீவிரப்படுத்தப்படும்.

கடந்த ஓராண்டாக கட்சிப் பதிவைப் பெற பெஜூவாங் கட்சி நீதிமன்றப் போராட்டத்தை நடத்தி வந்தது. கடந்த ஜூன் 25-ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அடுத்த 14 நாட்களுக்குள் பெஜூவாங் கட்சிக்கான பதிவு முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அந்தக் காலக் கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் பெஜூவாங் கட்சிக்கான பதிவும் இன்று அங்கீகரிக்கப்பட்டது.

இதே போன்ற போராட்டத்தை மற்றொரு புதிய கட்சியான மூடா கட்சி எதிர்நோக்கியுள்ளது.

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் மூடா கட்சிக்குத் தலைமையேற்றுள்ளார்.

பல இன இளைஞர்களைக் கொண்ட கட்சியாக மூடா உருவெடுத்து வருகிறது.