Home No FB காணொலி : மலாய் மொழி தேர்வு வழிகாட்டி – தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டுத்...

காணொலி : மலாய் மொழி தேர்வு வழிகாட்டி – தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டுத் தேர்வு (பகுதி 2)

910
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | மலாய் மொழி தேர்வு வழிகாட்டி | 2021 தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டுத் தேர்வு : 08 ஜூலை 2021 (பகுதி 2)
Selliyal Video | Bahasa Melayu Exam Guide | 2021 Standard 6 Assessment Test for Tamil Schools | 08 July 2021 (Part 2)

2021-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வுகள் நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டாலும், தமிழ்ப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்புக்கான மதிப்பீட்டுத் தேர்வுகள் பள்ளிகள் அளவிலேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளில் மலாய் மொழி பாடத்துக்கான தேர்வு வழிகாட்டியாக, மேற்கண்ட செல்லியல் காணொலியின் வழி சில வழிகாட்டுதல்களை வழங்குகிறார்கள் திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம், திருமதி கிருஷ்ணவேணி கிருஷ்ணன் ஆகிய இருவரும்!

#TamilSchoolmychoice

இந்தக் காணொலியின் முதல் பகுதி நேற்று புதன்கிழமை (ஜூலை 7) வெளியிடப்பட்டது. இன்று 2-ஆம் நிறைவுப் பகுதி பதிவேற்றம் காண்கிறது.

வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட யுபிஎஸ்ஆர் மலாய் மொழி தேர்வு வழிகாட்டி நூலின் தொகுப்பாசிரியர்களாக திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம், திருமதி கிருஷ்ணவேணி கிருஷ்ணன் ஆகிய இருவரும் இணைந்து அந்த நூலை உருவாக்கினர். நீண்ட காலமாக யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காக அவர்கள் இருவரும் மாணவர்களுக்குக் கற்றுத் தந்து வந்திருப்பவர்களாவர்.