Home நாடு கொவிட்-19: இதுவரை இல்லாத அளவுக்கு மரணங்கள் 135 – புதிய தொற்றுகள் 8,868!

கொவிட்-19: இதுவரை இல்லாத அளவுக்கு மரணங்கள் 135 – புதிய தொற்றுகள் 8,868!

2128
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை ஜூலை 8 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 104 மரணங்கள் பதிவாயின. இதுவரையில் பதிவான கொவிட் மரணங்களில் நேற்று பதிவான எண்ணிக்கைதான் மிக அதிகமானதாகும்.

இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 5,903 ஆக உயர்ந்தது.

மரணமடைந்தவர்களில் ஆண்கள் 78 பேர், பெண்கள் 57 பேர்.  மரணமடைந்தவர்களில் 20 பேர் மரணத்துக்குப் பின்னரே மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இவ்வாறு நாள்தோறும் மரணமடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்படும் கொவிட் தொற்று கண்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மரணமடைந்தவர்களில் ஒருவர் 30 வயதுக்கும் குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்தவர்களில் 79 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். 55 பேர் 50-க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்களாவர்.

ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 8868

ஒருநாள் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை இன்றைய ஒருநாளில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலாக அதிகரித்து 8,868 எனப் பதிவாகியது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 808,658 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 8,868 தொற்று சம்பவங்களில் 8,858 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 10 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,802-ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 725,480 -ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 77,275 ஆக உயர்ந்திருக்கிறது.

இவர்களில் 952 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 445 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 808,658 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரை சிலாங்கூர் 4,152 தொற்றுகளுடன் மிக அதிகமானத் தொற்றுகளைக் கொண்ட மாநிலமாகத் தொடர்ந்து பதிவாகியிருக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் 1,133 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 897 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.

நாடு முழுமையிலும் நேற்று புதன்கிழமை (ஜூலை 7) வரையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியது.

நேற்று வரையில் 10,036,361 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், அவற்றில் 6,999,554 முதல் தடவை போடப்பட்டவையாகும்.

எஞ்சிய 3,036,807 அளவைகள் இரண்டாவதாகப் போடப்பட்ட தடுப்பூசிகளாகும்.

நேற்று நள்ளிரவு வரையில் ஒருநாளில் 375,843 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

இவற்றில் 207,795 முதல் அளவை கொண்ட தடுப்பூசிகளாகும். எஞ்சிய 168,047 அளவைகள் இரண்டாவது தடுப்பூசிகளாகும்.

மாநிலங்களைப் பொறுத்தவரை கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைப் போன்றே தடுப்பூசிகள் செலுத்துவதிலும் சிலாங்கூர் முதல் மாநிலமாக இருக்கிறது.

இதுவரையில் 421,384 தடுப்பூசிகள் சிலாங்கூரில் செலுத்தப்பட்டிருக்கின்றன.

நாடு முழுமையிலும் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

மலேசியாவுக்கு அமெரிக்காவும், ஜப்பானும் தடுப்பூசிகளை வழங்கி உதவியிருக்கின்றன.

உலகம் முழுவதும் தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்காவின் திட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு ஒரு மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் பிபைசர் ரகத்தைச் சேர்ந்ததாகும்.

ஜப்பான் அஸ்ட்ரா ஜெனிகா இரக தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஜூலை மாதத்திற்குள் மேலும் 12 மில்லியன் அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் மலேசியாவுக்குள் வந்தடையும் என கொவிட் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்திருக்கிறார்.