Home நாடு கொவிட்-19; வரலாறு காணாத உயர்வு – 11,079 தொற்றுகள்

கொவிட்-19; வரலாறு காணாத உயர்வு – 11,079 தொற்றுகள்

1729
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை ஜூலை 13 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 11,079 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இது வரலாறு காணாத உயர்வாகும். இந்த எண்ணிக்கையில் இதுவரையில் ஒருநாள் தொற்றுகள் பதிவாகியதில்லை.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 855,949 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 5,263 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மொத்த தொற்றுகளில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான தொற்றுகள்  சிலாங்கூரில் பதிவாகியிருக்கின்றன.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் 1,521 தொற்றுகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மூன்றாவது இடத்தை 1,033 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.