Home No FB காணொலி : அம்னோ விலகல் : உண்மையா? அரசியல் நாடகமா?

காணொலி : அம்னோ விலகல் : உண்மையா? அரசியல் நாடகமா?

1035
0
SHARE
Ad

செல்லியல் பார்வை காணொலி | அம்னோ விலகல் : உண்மையா? அரசியல் நாடகமா? | 14 ஜூலை 2021
Selliyal Paarvai Video | UMNO’s Withdrawal : Real or Drama? | 14 July 2021

அம்னோ தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை மீட்டுக் கொள்வதாக அறிவித்த அடுத்த 2 நாட்களில் துணைப் பிரதமராகப் பதவியேற்ற இஸ்மாயில் சாப்ரியை அவரின் அலுவலகம் சென்று சந்திக்கிறார் அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி.

அம்னோ உச்சமன்ற முடிவுக்கு எதிராக தனது துணைப் பிரதமர் பணிகளைத் தொடக்குகிறார் இஸ்மாயில் சாப்ரி.

#TamilSchoolmychoice

அம்னோ உச்சமன்ற முடிவுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அம்னோ தலைவர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இதுவரையில் ஒழுங்கு நடவடிக்கை இல்லை.

ஜூலை 26 நாடாளுமன்றக் கூடவிருக்கும் நிலையில், அம்னோ உண்மையிலேயே தேசியக் கூட்டணியிலிருந்து விலகுகிறதா? அல்லது அரசியல் நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறதா?

மேற்கண்ட செல்லியல் காணொலியில் விவாதிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.