Home நாடு கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 10,972!

கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 10,972!

2020
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை ஜூலை 19 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 10,972 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

நாட்டில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் தொற்றுகள் பதிவாகி வருகின்றன.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 927,533 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 4,404 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் 1,340 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

876 தொற்றுகளோடு ஜோகூர் 3-வது இடத்தில் இருக்கிறது.

609 தொற்றுகளோடு கோலாலம்பூர் நான்காவது  இடத்தில் இருக்கிறது.