Home உலகம் எமது குடும்பத்திலுள்ள அனைவரையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்!- ஜனாதிபதி

எமது குடும்பத்திலுள்ள அனைவரையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்!- ஜனாதிபதி

557
0
SHARE
Ad

rajapakse-sliderஇலங்கை, ஏப்ரல் 21- ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுகின்ற விமர்சனங்களுக்கு அஞ்சாமல் மக்களுக்கு நேர்மையாக சேவையாற்ற வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சாதகமான கண்ணோட்டத்துடன் செயற்பட்டால் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான இயலுமை தோன்றும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, விமர்சனங்கள் குறித்து அச்சமடையாமல் மனதுக்கு நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றுங்கள் என தெரிவித்தார்.

அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பிரதேச சபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அநுராதபுரத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் கடந்த நேற்று முன்தினம் பிரதேச சபை உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இணையத்தளங்களில் எம்மை கடுமையாக விமர்சிக்கின்றனர். குடும்பத்திலுள்ள அனைவரையும் விமர்சிக்கின்றனர். கோத்தபாய, பசிலை விமர்சிக்கின்றனர். அதோடு நின்றுவிடாது எமது பிள்ளைகள் மூவரையும் விமர்சிக்கின்றனர்.

இவ்வாறான விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்தாது மக்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் என்றார் ஜனாதிபதி.