Home நாடு கொவிட்-19; கொவிட் தொற்று மரணங்கள் 134 – மொத்த தொற்றுகள் 13,034

கொவிட்-19; கொவிட் தொற்று மரணங்கள் 134 – மொத்த தொற்றுகள் 13,034

2356
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் தொற்றுகளின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் 134 ஆக பதிவானது.

இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 7,574 ஆக உயர்ந்திருக்கிறது

இன்று வியாழக்கிழமை ஜூலை 22 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 13,034 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

நாடு முழுவதிலும் கொவிட் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 142 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

கொவிட் தொடர்பான தொற்றுகளின் ஒருநாள் புள்ளி விவரங்களைக் மேற்காணும் வரைபடத்தில் காணலாம்:

மாநிலம் வாரியான தொற்றுகளின் எண்ணிக்கையை கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்:

இதற்கிடையில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்படும் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதுவரையில் மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டு இருக்கிறது.

அந்த புள்ளிவிவரங்களை கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்: