Home இந்தியா கலைஞர் – விஜயகாந்த் திடீர் சந்திப்பு- படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார் கருணாநிதி

கலைஞர் – விஜயகாந்த் திடீர் சந்திப்பு- படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார் கருணாநிதி

774
0
SHARE
Ad

karunanithi-sliderசென்னை, ஏப்ரல் 21- தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கும் இடையில் திடீரென சந்திப்பு இடம்பெற்றதுடன், பரஸ்பரம் நலம் விசாரித்தும் கொண்டனர்.

“தினத்தந்தி’ நாளிதழ் அதிபர், சிவந்தி ஆதித்தனின் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த சென்றபோது, சென்னை போயஸ் தோட்டத்தில் இந்த சந்திப்பு, நேற்றுக் காலை நடந்தது.

அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் வெளியில் கொண்டிருந்தபோது, எதிரே, காரில் கலைஞர் வந்தார். இருவரும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

காரிலிருந்த, கலைஞருக்கு, விஜயகாந்த் வணக்கம் செலுத்த, கலைஞரும் பதில் வணக்கம் செலுத்தினார். அப்போது, தி.மு.க., துணை பொதுச் செயலர் துரைமுருகன் உடனிருந்தார். அண்மை காலத்தில், இரு தலைவர்களும் நேருக்கு, நேர் சந்திப்பது இதுவே முதல்முறை.

இருவரும் வணக்கம் செலுத்திக் கொண்ட புகைப்படத்தை திமுக தலைவர் கருணாநிதியே வெளியிட்டுள்ளார்.