கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜூலை 24) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பதிவாகியது. 15,902 ஆக தொற்றுகளின் எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.
சிலாங்கூரில் மட்டும் 7,351 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,406 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த சில நாட்களில் தொற்றுகள் அதிகரித்து வரும் கெடாவில் ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 867 ஆக பதிவாகியது.
ஒருநாள் மரண எண்ணிக்கை 184 ஆக உயர்ந்தது. நேற்று ஒருநாள் மரண எண்ணிக்கை 144 ஆக இருந்தது.
மரணமடைந்தவர்களில் 152 பேர் மருத்துவமனைகளில் மரணமடைந்திருக்கிறார்கள். 32 பேர் மரணமடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.
153,633 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொவிட் தொடர்பான தொற்றுகளின் ஒருநாள் புள்ளி விவரங்களைக் மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.
மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்: