Home நாடு “அவசர காலம் ஆகஸ்ட் 1-க்குப் பிறகு நீடித்தால் அம்னோ அமைச்சர்கள் விலகுவர்” – சாஹிட் ஹாமிடி

“அவசர காலம் ஆகஸ்ட் 1-க்குப் பிறகு நீடித்தால் அம்னோ அமைச்சர்கள் விலகுவர்” – சாஹிட் ஹாமிடி

924
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நடப்பிலிருக்கும் அவசர கால சட்டங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கப்படும்  நிலையை ஏற்பட்டால் அம்னோவின் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் என அனைவரும் அரசாங்கத்திலிருந்து விலகுவர் என சாஹிட் ஹாமிடி கூறியுள்ளார்.

அம்னோவின் தேசியத் தலைவருமான சாஹிட், இது கட்சியின் முடிவு என்றும் கூறியுள்ளார்.

நாளை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவசர கால சட்டங்கள் மற்றும் அதன் அமுலாக்கங்களும் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் சாஹிட் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மலேசிய அரசியலமைப்பு சட்டம் 150 (7) விதியின்படி அவசர கால சட்டம் அமுலாக்கப்பட்டு 6 மாத கால நிறைவைக் கண்ட பின்னர் அந்த சட்டம் நாடாளுமன்றத்தால் இரத்து செய்யப்பட வேண்டும் -இல்லாவிட்டால் இயல்பாகவே மேலும் 6 மாதங்களுக்கு அந்த அவசர கால சட்டம் அமுலில் இருந்து வரும் என்பதையும் சாஹிட் சுட்டிக் காட்டினார்.

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட அவசர கால சட்டம் தோல்வியடைந்து விட்டது என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.