Home நாடு கொவிட் : புதிய ஒருநாள் தொற்றுகள் 17,405 ஆக உயர்ந்தன

கொவிட் : புதிய ஒருநாள் தொற்றுகள் 17,405 ஆக உயர்ந்தன

455
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கொவிட் தொற்றுகளின் ஒருநாள் எண்ணிக்கை இன்று புதன்கிழமை (ஜூலை 28) நண்பகல் வரையிலான 24 மணி நேரத்தில் 17,405 ஆக மீண்டும் உயர்ந்தன.

நேற்றைய கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 16,117 ஆக பதிவாகியது. இந்த எண்ணிக்கை இன்று மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் அதிகரித்திருக்கிறது.

நேற்றைய மரண எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 207 ஆக உயர்ந்தது என்பதும், தொடர்ந்து 2 நாட்களுக்கு இதே எண்ணிக்கை தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைக் கொண்ட 3 மாநிலங்களாக சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசம், கெடா ஆகியவை வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

நேற்றைய (ஜூலை 27) மரண எண்ணிக்கையான 207-ஐக் காட்டும் மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.