Home நாடு கொவிட்-19; ஒருநாள் மரணங்கள் -143 – மரணத்துக்குப் பின் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 14

கொவிட்-19; ஒருநாள் மரணங்கள் -143 – மரணத்துக்குப் பின் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 14

2560
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜூலை 28) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் உயர்ந்து 17,405 ஆகப் பதிவாகியிருக்கிறது.

நேற்று ஒருநாள் எண்ணிக்கை 16,117 ஆகப் பதிவாகியது.

இன்றைய ஒருநாள் மரண எண்ணிக்கை 143 ஆகும். நேற்றைய மரண எண்ணிக்கையான 207 என்பதுடன் ஒப்பிடும்போது இன்றைய எண்ணிக்கை குறைவாகும்.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் 129 பேர் மருத்துவமனைகளில் மரணமடைந்திருக்கிறார்கள். 14 பேர் மரணமடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.

175,113 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொவிட் தொடர்பான தொற்றுகளின் ஒருநாள் புள்ளி விவரங்களைக் மேற்கண்ட  வரைபடத்தில் காணலாம்.

மாநிலங்களைப் பொறுத்தவரை கெடாவில் தொற்றுகள் அதிகரித்து 1,112 ஆகப் பதிவாகியது.

அதிக தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூரும், அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூரும் இருந்து வருகின்றன.