கோலாலம்பூர் : இன்று 4-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மலேசிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மத்தியான வேளையில் அமளியில் முடிந்தது.
தக்கியூடின் ஹாசானும், சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருணும் தனக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு முரணாக நடந்து கொண்டனர் என்றும் என்னை அவமதித்து விட்டனர் என்றும் மாமன்னர் கடுமையான அறிக்கை ஒன்றை இன்று காலையில் விடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறைகூவல் விடுத்தார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளிகளினால் நாடாளுமன்றம் பிற்பகலில் தொடரும் என அறிவிக்கப்பட்டது. எனினும் பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்க வேண்டிய நாடாளுமன்றக் கூட்டம் ஒருமணி நேரம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கும் என்றும் அவைத் தலைவர் அசார் அசிசான் அறிவித்திருக்கிறார்.