Home நாடு தேசிய முன்னணியின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவா?

தேசிய முன்னணியின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவா?

520
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: தேசிய முன்னணியின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மொகிதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்ற செய்தி குறித்த குழப்பங்கள் நீடிக்கின்றன.

துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நேற்று வியாழக்கிழமை (ஜூலை 30) நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என செய்திகள் வெளியிடப்பட்டன.

உடனடியாக தேசிய முன்னணி அலுவலகம் வெளியிட்ட மறுப்பறிக்கையில் அந்தச் செய்தி பொய்ச் செய்தி எனத் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி சார்பில் தற்போது 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 40 பேர் இஸ்மாயில் சாப்ரி கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் இஸ்மாயில் சாப்ரி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். தேசிய முன்னணியின் சின்னத்தைத் தாங்கி வெளியிடப்பட்ட அந்த அறிக்கை உண்மையானது என்றும் இஸ்மாயில் சாப்ரியின் செயலாளர்களில் ஒருவர் தெரிவித்தார் என மலேசியாகினி செய்தி தெரிவித்தது.

எனினும், பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்ட தேசிய முன்னணியின் நிருவாகச் செயலாளர் முகமட் சாப்ரி அப்துல் அசிஸ், இஸ்மாயில் சாப்ரியின் செய்தி பொய் செய்தி எனக் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணியின் அதிகாரபூர்வ செய்தி அதன் தலைவர் அல்லது தலைமைச் செயலாளர் வாயிலாகத்தான் வெளியிடப்படும் என்றும் தேசிய முன்னணியின் அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாகத்தான் வெளியிடப்படும் என்றும் முகமட் சாப்ரி அப்துல் அசிஸ் கூறினார்.