Home நாடு “மொகிதினை ஆதரிக்காத கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்னரிடம் சமர்ப்பித்துள்ளேன்” – சாஹிட்

“மொகிதினை ஆதரிக்காத கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்னரிடம் சமர்ப்பித்துள்ளேன்” – சாஹிட்

794
0
SHARE
Ad
சாஹிட் ஹாமிடி – மொகிதின் யாசின்(கோப்புப் படம்)

கோலாலம்பூர் : மொகிதின் யாசினை அதிகரிக்காத மேலும் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னரிடம் ஒப்படைத்துள்ளதாக அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார்.

இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து சாஹிட் தெரிவிக்கவில்லை.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து கீழ்க்காணும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கான தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்து அதற்கான சத்தியப் பிரமாண ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர்.

  1. நஜிப் அப்துல் ரசாக் (பெக்கான்)
  2. அகமட் சாஹிட் ஹாமிடி (பாகான் டத்தோ)
  3. அசாலினா ஒத்மான் சைட் (பெங்கெராங்)
  4. முகமட் நிசார் சக்காரியா (பாரிட்)
  5. அசிஸ் அப்துல் ரஹிம் (பாலிங்)
  6. நோ ஓமார் (தஞ்சோங் காராங்)
  7. அகமட் நாஸ்லான் இட்ரிஸ் (ஜெரண்டுட்)
  8. அகமட் ஜாஸ்லான் யாக்கோப் (மாச்சாங்)
  9. துங்கு ரசாலி ஹம்சா (குவா மூசாங்)
  10. ரம்லி முகமட் நோர் (கேமரன் ஹைலண்ட்ஸ்)
  11. அகமட் மஸ்லான் (பொந்தியான்)

இந்தப் பட்டியலில் மேலும் சிலர் இணையக்கூடும் என்றும் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப, அறிவிக்கப்பட்டவர்களைத் தவிர மேலும் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினை ஆதரிக்க முன்வரவில்லை என்றும் அவர்களின் பட்டியல் மாமன்னரின் பார்வைக்காக அரண்மனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் சாஹிட்தெரிவித்தார்.