கோலாலம்பூர் : திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் ஒவ்வொரு நாளும் இரவு 10.00 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ஒளியேறி வரும் “ஆஸ்ட்ரோ விழுதுகள் – சமூகத்தின் குரல்” என்ற நிகழ்ச்சி தொலைக்காட்சி இரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடப்பு விவகாரங்களை அலசுவது, துறைசார்ந்த வல்லுநர்களின் விளக்கங்கள், நடப்பு அரசியல், சமூகப் பிரச்சனைகளைக் கண்ணோட்டமிடுவது போன்ற காரணங்களால் அந்த நிகழ்ச்சி அதிகமான இரசிகர்களை ஈர்த்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) “ஆஸ்ட்ரோ விழுதுகள் – சமூகத்தின் குரல்” நிகழ்ச்சியில் “சமூக ஊடகங்களும் அரசியலும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெறுகிறது.
இந்தக் கலந்துரையாடலில் செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் (படம்) பங்கேற்கிறார்.