Home நாடு கொவிட் 19 : புதிய தொற்றுகள் 20,780

கொவிட் 19 : புதிய தொற்றுகள் 20,780

730
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை ஆகஸ்ட் 11 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைக் கடந்து 20,780 ஆகப் பதிவாகியது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் என்ற நிலையில் இருந்து வருகின்றன.

6,921 ஒருநாள் தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அது தவிர மேலும் 7 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்திருக்கின்றன. கோலாலம்பூர், ஜோகூர், கெடா, சபா, பினாங்கு, கிளந்தான், நெகிரி செம்பிலான் ஆகியவையே அந்த 7 மாநிலங்களாகும்.