Home நாடு “தே.முன்னணி தலைமையை விக்னேஸ்வரனிடம் ஒப்படைப்பது சிறந்ததா?” மு.பெரியசாமி அரசியல் கண்ணோட்டம்

“தே.முன்னணி தலைமையை விக்னேஸ்வரனிடம் ஒப்படைப்பது சிறந்ததா?” மு.பெரியசாமி அரசியல் கண்ணோட்டம்

953
0
SHARE
Ad

(தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்) கூட்டணியில் அண்மையக் காலமாக எழுந்திருக்கும் குழப்பங்கள், முரண்பாடுகளுக்கு தீர்வு அந்தக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அம்னோ தவிர்த்து மற்ற உறுப்பியக் கட்சிகளிடம் ஒப்படைப்பதா? அந்த வகையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனிடம் தேசிய முன்னணி கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பது பொருத்தமான தீர்வாக அமையுமா? தனது அரசியல் கண்ணோட்டத்தை வழங்குகிறார் பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி)

சமீபத்தில் சங்கப் பதிவதிகாரி அம்னோவுக்கு அனுப்பிய அறிக்கையின்படி அம்னோவின் 2018/2021 தவணைக்கு தேர்வு செய்யப்பட்டக் கட்சியின் உச்சமன்றப் பொறுப்பாளர்களின் பதவிக் காலம் கடந்த ஜூன் 30, 2021-ல் முடிவடைந்தது.

இது தொடர்பாகப் புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு 18 மாத அவகாசம் தேவைப்படுகிறது என அம்னோ கேட்டுக் கொண்ட விண்ணப்பத்தை மலேசிய சங்கப் பதிவகம் (ஆர்.ஓ.எஸ். – R.O.S. ) நிராகரித்து விட்டது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அம்னோ விரைவில் ஆண்டுக் கூட்டத்தினைக் கூட்டித் தனது புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் எனவும் சங்கப் பதிவகம் ஆணையிட்டுள்ளது.

கட்டுரையாளர் டத்தோ மு.பெரியசாமி

இதன் அடிப்படையில் சாஹிட் ஹாமிடி அம்னோவின் தலைவராகத் தொடர்ந்து இருப்பது சட்டத்திற்குப் புறம்பானதெனக் கருதப்படுகிறது. மேலும், இதுநாள்வரை தேசிய முன்னணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருந்த அம்னோ இன்று பிளவுபட்டுக் கட்சிப் பூசலில் மூழ்கியுள்ளது.

ஒரு தரப்பினர் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் , மற்றொரு தரப்பினர் மொகிதினுக்கு எதிர்ப்பாகவும் செயல்படுவதால் கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றுமை சீர்குலைந்து இருக்கிறது.

அம்னோவின் தலைமைத்துவம் ஒரு கேள்விக்குறியாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இதுநாள் வரை தேசிய முன்னணி தலைவர் பதவியை ஏற்று நடத்திய அம்னோ தொடர்ந்து அந்த தலைமைப் பொறுப்பில் இருப்பது பல்வேறு சிக்கல்களைக் கொண்டுவரும்.

ஆகவே, தேசிய முன்னணி தலைமைத்துவத்தை தேசிய முன்னணியின் இதர கட்சித் தலைவர்களிடம் ஒப்படைக்கும்படி பல்வேறு தரப்பினர் அம்னோ தலைமைத்துவத்தை நெருக்கி வருகின்றனர்.

மேலும் தேசிய முன்னணி தலைவர் பதவி அம்னோவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற இதர கட்சிகளுக்கும் அத்தகைய உரிமை உண்டு.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளில் ம.இ.கா.தான் ஒரு பலம் வாய்ந்த, ஒற்றுமையான, மக்கள் ஆதரவு பெற்றக் கட்சியாகத் திகழ்கிறது.

ஆகவே, தேசிய முன்னணி தலைவர் பொறுப்பினை ம.இ.காவின் தேசியத் தலைவரும், தேசிய முன்னணியின் இதர கட்சிகளின் நன்மதிப்பையும் பெற்றவருமான டான்ஶ்ரீ ச.விக்னேவரனிடம் ஒப்படைப்பதுதான் விவேகமான முடிவாக அமையும்.

இதன் வழி தேசிய முன்னணி கட்டுக்கோப்பான கூட்டணியாகத் தொடர்ந்து திகழும்.

-டத்தோ மு.பெரியசாமி