Home நாடு கொவிட் 19 : தொற்றுகள் தொடர்ந்து 21 ஆயிரத்தைக் கடந்தன

கொவிட் 19 : தொற்றுகள் தொடர்ந்து 21 ஆயிரத்தைக் கடந்தன

742
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று  ஆகஸ்ட் 13 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 21 ஆயிரத்தைக் கடந்து 21,468 ஆகப் பதிவாகியது.

நேற்றும் இதே போன்று 21 ஆயிரத்தைக் கடந்த எண்ணிக்கையில் கொவிட் ஒரு நாள் தொற்றுகள் பதிவாகின,

இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 1,363,683 ஆக உயர்ந்ததாக சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் தகவல் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் 7 ஆயிரத்தைக் கடந்தும், கோலாலம்பூர் 2 ஆயிரத்துக்கும் கூடுதலாகவும் தொற்றுகளைப் பதிவு செய்தன.

இவை தவிர, கெடா, பினாங்கு, ஜோகூர், கிளந்தான், சபா, ஆகிய 5 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.