Home நாடு மஇகா, இஸ்மாயில் சாப்ரிக்கு ஆதரவு

மஇகா, இஸ்மாயில் சாப்ரிக்கு ஆதரவு

1063
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரியை அடுத்த பிரதமராக ஏற்றுக் கொள்ள அம்னோவின் தலைவர் சாஹிட் ஹாமிடி முன்வர வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இப்போது அம்னோவைச் சேர்ந்த ஒருவரே பிரதமராக முன்னிறுத்தப்படுவதால் சாஹிட் கண்டிப்பாக அவரை ஆதரிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

இஸ்மாயில் சாப்ரி மட்டுமே தேசிய முன்னணி சார்பிலான வேட்பாளர் எனவும் அறிவித்தார் விக்னேஸ்வரன். அவரால் மட்டுமே அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும், குறிப்பாக பெர்சாத்து கட்சியின் ஆதரவைப் பெற முடியும் என விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

அம்னோவின் சார்பிலான இன்னொரு வேட்பாளரை பிரதமராக சாஹிட் முன்மொழிந்தாலும் அவருக்கு பெரும்பான்மை கிடைக்காது. அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

இஸ்மாயில் சாப்ரிதான் மஇகாவின் பிரதமர் வேட்பாளர் எனவும் அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

பதவி விலகும் மொகிதின் யாசின் அமைச்சரவையில் மஇகாவின் சார்பில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ எம்.சரவணன், மனித வள அமைச்சராக இடம் பெற்றிருந்தார்.

மீண்டும் தேசியக் கூட்டணி சார்பிலான அரசாங்கத்தை அமைக்கவும் இஸ்மாயில் சாப்ரியை பிரதமராகவும், உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினை துணைப் பிரதமராகவும் முன்னிறுத்தி ஆதரவு திரட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.