கோலாலம்பூர்: கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்து வந்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை இன்று 17 ஆயிரமாகக் குறைந்தன.
இன்று ஆகஸ்ட் 23 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 17,672 ஆகப் பதிவாகின.
கொவிட் தொற்றுகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 174 ஆகப் பதிவாகியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,572,765 ஆக உயர்ந்தது.
மரணமடைந்தவர்களில் 153 பேர் மருத்துவமனைகளில் மரணமடைந்தனர். மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 21 பேர்.
இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 14,342 ஆக உயர்ந்திருக்கிறது.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் புள்ளிவிவரங்களை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,040 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 502 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலங்கள் ரீதியிலான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.
சிலாங்கூரில் பதிவான மொத்த தொற்றுகள் 4,316 ஆகும்.
கோலாலம்பூரில் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் இல்லாத அளவுக்கு ஆயிரத்துக்கும் குறைவாகக் குறைந்தன.
பினாங்கு, கெடா, ஜோகூர், கிளந்தான், சரவாக் ஆகிய 5 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.
சபா 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தது.