Home நாடு கெடா வெள்ளப் பேரிடர் : இஸ்மாயில் சாப்ரி 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு

கெடா வெள்ளப் பேரிடர் : இஸ்மாயில் சாப்ரி 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு

500
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் : பிரதமராக நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் புத்ரா ஜெயாவிலுள்ள தனது அதிகாரபூர்வ அலுவலகத்தில் பணிகளைத் தொடங்கிய இஸ்மாயில் சாப்ரி முதல் அலுவல் பயணமாக கெடா நோக்கி பயணமானார்.

அங்கு ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பாதிப்புகளை இஸ்மாயில் சாப்ரி நேரில் பார்வையிட்டார்.

குனோங் ஜெராய் மலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நிகழ்ந்த பாதிப்புகளுக்காக முதல் கட்டமாக 75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை இஸ்மாயில் சாப்ரி வழங்கினார்.

#TamilSchoolmychoice

பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் உள்ள ஆறுகளை அகலப்படுத்துவது, ஆழப்படுத்துவது, சுற்று வட்டார பாசன, வடிகால் மேம்பாடுகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 500 ரிங்கிட் வழங்கப்படுகிறது. மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்றும் இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேம்பாட்டு நடவடிக்கைகளை அடுத்த மாதம் முதற்கொண்டு மேற்கொள்ள இயற்கைவளம், சுற்றுச் சூழல் அமைச்சுக்கும் இஸ்மாயில் சாப்ரி உத்தரவிட்டார்.

குனோங் ஜெராய் மலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதோடு, சில மரண சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.