கோலாலம்பூர் : நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது கோலாலம்பூரில் செயல்பட்டு வரும் உலக புத்ரா வாணிப மையத்தில் அமைந்திருக்கும் தடுப்பூசி மையம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) வரையில் இந்த தடுப்பூசி மையத்தில் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கின்றன.

அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்னும் 50 விழுக்காட்டு நிறைவு பூர்த்தியடையாத மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த மாநிலங்களில் தடுப்பூசி போடப்படும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார்.

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal