Home நாடு “நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” – லிம் குவான் எங்

“நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” – லிம் குவான் எங்

972
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைப்பது  என்பது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று – ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இஸ்மாயில் சாப்ரி நிரூபிக்க வேண்டும் என ஜனநாயகச் செயல் கட்சியின் (ஜசெக) தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

அப்படிச் செய்யாவிட்டால் அது மாமன்னரின் உத்தரவை மீறியதாகும் என்றும் மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியதாகும் என்றும் லிம் குவான் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் செப்டம்பர் 13-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பில் கருத்துரைத்தபோதே லிம் குவான் எங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செப்டம்பர் 13 தொடங்கி அக்டோபர் 12-ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும்.

மாமன்னரின் தொடக்க உரையோடு நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கும்.

ஒத்தி வைப்புக்கான கடிதம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 30) அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டது.

12-வது மலேசியத் திட்டம் குறித்தும் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா?

இந்த முறை செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மாமன்னரின் உத்தரவுக்கு ஏற்ப நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய மாதங்களில் எழுந்த மலேசிய அரசியலமைப்புச் சட்டம் மீதான குழப்பங்களைத் தொடர்ந்து ஒரு பிரதமர் நாடாளுமன்றத்தில்தான் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சட்டரீதியான கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அதற்கேற்ப, யார் பிரதமராக நியமிக்கப்பட்டாலும் அவர் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மாமன்னர் உத்தரவிட்டிருந்தார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal