
புத்ரா ஜெயா : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 1) நடைபெறவிருக்கும் கொவிட் 19 தொடர்பான சிறப்பு செயற்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தலைமையேற்கிறார்.
கொவிட் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன எடுப்பது என்பது குறித்து இந்த சிறப்புக் குழு விவாதித்து முடிவெடுக்கும்.
இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களுக்கான சலுகைகள், 2-ஆம் கட்ட மீட்சி நிலைக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு திரும்புவது போன்ற விவகாரங்களை இந்த செயற்குழு விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பிரதமர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதால் இந்தக் கூட்டம் இயங்கலை வழி நடத்தப்படும்.
இன்றைய சிறப்புக் கூட்டத்திற்குப் பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal