Home நாடு கொவிட்-19 சிறப்புக் குழு- எதிர்கட்சிகளும் இனி பங்கேற்கும்

கொவிட்-19 சிறப்புக் குழு- எதிர்கட்சிகளும் இனி பங்கேற்கும்

596
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : கொவிட் 19 தொடர்பான சிறப்பு செயற்குழுக் கூட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இனி அந்தக் குழுவில் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கு பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தொற்றுக்கான மேலாண்மை சிறப்புக் குழு (Special Committee on Pandemic Management) என்ற பெயரில் இந்தக் குழு இனி செயல்படும்

கொவிட் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன எடுப்பது என்பது குறித்து இந்த சிறப்புக் குழு விவாதித்து முடிவெடுக்கும்.

#TamilSchoolmychoice

ஒரே மலேசியக் குடும்பம் அடிப்படையில் இந்த சிறப்பு செயற்குழு மறு சீரமைப்பு செய்யப்படுவதாக பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 2) விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அக்டோபர் இறுதிக்குள் 100 விழுக்காட்டினருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் அனைவரும் கொவிட்-19 பாதிப்புகளோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்மாயில் சாப்ரி தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.

சுகாதார அமைச்சரான பின்னர் கைரி ஜமாலுடின் நடத்திய முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் கொவிட்டை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு செயல்படும் என்றார்.

பொதுமக்கள் வழக்கமான வாழ்க்கை நிலைக்குத் திரும்புவதற்கான நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதே வேளையில் பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படும் என்றும் கைரி தெரிவித்திருக்கிறார்.