Home நாடு பக்காத்தான் ஹாரப்பான் – அரசாங்கம் இடையில் வரலாற்றுபூர்வ உடன்பாடு

பக்காத்தான் ஹாரப்பான் – அரசாங்கம் இடையில் வரலாற்றுபூர்வ உடன்பாடு

604
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹாரப்பானுக்கும் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 13) வரலாற்றுபூர்வ உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்படவிருக்கிறது.

இதற்கு முன்னர் இதுபோன்ற உடன்பாடுகள் மலேசிய அரசியலில் கையெழுத்திடப்பட்டதில்லை.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரு தரப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

இஸ்மாயில் சாப்ரி முன்வைத்த 7 நாடாளுமன்ற, சட்டத் திருத்தங்களின் அடிப்படையில் இந்த உடன்பாடு காணப்பட்டிருக்கிறது.

இன்று மாலையில் நாடாளுமன்றத்தில் இருதரப்புகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இஸ்மாயில் சாப்ரி தனக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்றும் அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பக்காத்தான் கூட்டணி அவருக்கு ஆதரவு வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இத்தகைய உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பை இஸ்மாயில் சாப்ரி தவிர்க்கலாம் என்ற ஆரூடங்களும் எழுந்திருக்கின்றன.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal