புத்ரா ஜெயா : பள்ளிகளுக்கான 2021-ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு எதிர்வரும் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என கல்வி அமைச்சர் முகமட் ராட்சி ஜிடின் அறிவித்திருக்கிறார்.
இந்த முடிவின்படி இந்த 2021-ஆம் ஆண்டு வகுப்பில் இருக்கும் மாணவர்கள் தங்களின் கல்வியை பிப்ரவரி மாதம் வரை அதே வகுப்பில் இருந்து தொடர்வர். விடுபட்ட பாடங்களை அவர்கள் இதன் மூலம் தொடர்ந்து படித்து வர முடியும்.
தற்போது ஆரம்பப் பள்ளிகளில் பயின்று வருபவர்கள் தொடர்ந்து அதே வகுப்பில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் வரையில் பயின்று வருவர்.
2022-ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு எதிர்வரும் மார்ச் மாதத்தில்தான் தொடங்கும் என்றும் ராட்சி ஜிடின் அறிவித்தார்.
இனி, அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் கல்வியாண்டு இனி 2022/2023 கல்வியாண்டு என அதிகாரபூர்வமாக குறிப்பிடப்படும்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal